போதை மாத்திரைகளுடன் மன்னாரில் இருவர் கைது!

இலங்கைக் கடற்படை மற்றும் மன் னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக் கையின் மூலம் 1, 472 போதை மாத்திரைகளுடன் 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஓர் ஓட்டோவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று மதியம் மன்னார் நகர் பகுதியில் இடம்பெற் றுள்ளது.

வடமேற்குக் கடற்படைக் கட்டளையி னால் வழங்கப்பட்ட தகவலின் அடிப் படையில் வடமத்திய கடற்படை கட்ட ளையில் உள்ள கஜபா மற்றும் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் மன்னார் உப்புக்குளம் பகுதியில் தேடு தல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இந்த நடவடிக்கையில் 20 Pregabalin கேப்சூல்கள் வைத்திருந்ததற் காக ஒருவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் அதே பகுதியில் மீண்டும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது ஒரு வீட்டில் இருந்து 1432 Pregabalin காப்ஸ்யூல்கள் மற்றும் ஓட்டோ ஒன்றில் இருந்து அதே மருந்தின் 20 காப்ஸ் யூல்கள் உடன் மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலாவத் துறை மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடையவர் கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள் ளனர். சந்தேகநபர்கள் மருந்து மாத் திரைகள் மற்றும் ஓட்டோவுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலி ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles