போன் வாங்குவதற்காக பாட்டியை கொலை செய்த 15 வயது பேரன் – பெலியத்த பகுதியில் பயங்கரம்!

கையடக்க தொலைபேசி வாங்குவதற்காக பணம் திரட்டும் நோக்கில் தனது பாட்டியை கொலை செய்தார் எனக் கூறப்படும் 15 வயது சிறுவன் பெலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலியத்த பகுதியில் உள்ள வீடொன்று உடைக்கப்பட்டு சுமார் 4 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டுள்ளார். இதன்போதே தனது பாட்டியை கொலை செய்த சம்பவத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த சிறுவனும், அவரது 70 வயது பாட்டியும் வசித்துவந்த நிலையில் பாட்டி கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். எனினும், மரண பரிசோதனை மேற்கொள்ளப்படாமல் அவருக்கு இறுதி கிரியைகள் நடத்தப்பட்டு, சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தனது பாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை பெறுவதற்காக, அவரின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்ததாக சிறுவன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

கையடக்க தொலைபேசியொன்றை வாங்குவதற்காகவே இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகின்றனது. பாட்டியின் தங்க சங்கிலி, நண்பர் ஒருவரிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது. அவர் கடற்றொழிலுக்கு சென்றுள்ளார் என தெரியவருகின்றது.

குறித்த சிறுவனும், அவரது மற்றுமொரு நண்பரும் தங்காலை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாட்டியின் சடலம், விசாரணைகளுக்காக இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles