போராடி தோற்றது இலங்கை – நியூசிலாந்து அணி இரு விக்கெட்டுகளால் வெற்றி!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

முதன் இன்னிங்ஸில் இலங்கை அணி 355 ஓட்டங்களையும், நியூசிலாந்து அணி 377 ஓட்டங்களையும் பெற்றது.இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 302 ஓட்டங்களைக் குவித்தது.

இதன்படி நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 285 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டன. ஐந்தாவது நாளான இன்று 8 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி வெற்றி இலக்கை அடைந்தது.

இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தெரிவாகுவதற்கு இருந்த வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.

புள்ளி பட்டியல் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. ஜூன் 7 ஆம் திகதி லண்டனில் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.

Related Articles

Latest Articles