போராட்டங்களை ஒடுக்க இடமளியோம் – சஜித் சூளுரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பதிலடி கொடுத்தார்.

” ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மீண்டுமொரு போராட்டம் நடத்தப்படுமென கூறப்படுகின்றது. அதற்கு நான் இடமளிக்கபோவதில்லை. இராணுவத்தை களமிறக்குவேன். அவசரகால சட்டத்தை பயன்படுத்துவேன்.” – என்று ஜனாதிபதி நேற்று குறிப்பிட்டார்.

இது தொடர்பில் இன்று கருத்து வெளியிட்ட சஜித்,

” மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எவருக்கும் இடமளிக்கமாட்டோம். நாம் மக்கள் பின்னால் நிற்போம். ஆனால் எவரேனும் வன்முறைகளில் ஈடுபட்டால் , சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம்.” – என்று சஜித் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles