நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம்மீதான வாக்கெடுப்பை புறக்கணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது.
எனினும், வாக்கெடுப்பில் பங்கேற்று, அதற்கு ஆதரவாக பௌசி வாக்களித்திருந்தார். இந்நிலையிலேயே அவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
