மகளுக்கு சிறுநீரகம் பாதிப்பென பொய்கூறி யாசகம் பெற்ற தந்தை கைது!

காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேண்டும் என பொய் கூறி யாசகம் பெற்ற தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் , கல்வியங்காடு சந்தை பகுதியில் 4 வயது சிறுமியை சக்கர நாற்காலியில் இருத்தி , சிறுமியின் இரு சிறுநீரகங்களுக்கு பழுதடைந்துள்ளதாகவும் , அதற்கான சிகிச்சைக்கு பண உதவி செய்யுமாறு கோரி ஒருவர் யாசகம் பெற்றுள்ளார்.

யாழில் நிலவும் கடுமையான வெப்பமான காலநிலையில் , வெயிலுக்குள் சிறுமியை சக்கர நாற்காலியில் இருத்தி வைத்து ஒருவர் யாசகம் பெறுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சிறுமியை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் , யாசகம் பெற்ற நபரையும் கைது செய்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் சிறுமிக்கு எவ்விதமான உடல்நல குறைபாடுகளும் இல்லை. சிறுமி ஆரோக்கியமாகவுள்ளார் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தவேளை , தான் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும் , சிறுமி தனது மகள் எனவும் கூறியுள்ளார்.

நீதிமன்றில் தந்தையை முற்படுத்தியதை அடுத்து , தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறும் , சிறுமியை சிறுவர் காப்பகத்தில் அனுமதிக்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.

Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51

Related Articles

Latest Articles