மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகாத்மா காந்தியின் 56 வயதான கொள்ளு பேத்திக்கு தென்னாப்பிரிக்கா டர்பன் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் வாழும் பிரபல மனித உரிமை ஆர்வலர்கள் எலா காந்தி மற்றும் மறைந்த மேவா ராம்கோபிந்தின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின்( வயது 56) .ராம்கோபின் அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் பங்கேற்பு மேம்பாட்டு முயற்சியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

இவர் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆவார். இவர் மீது தொழிலதிபர் ஒருவர் பண மோசடி செய்ததாக கடந்த புகார் அளித்தார்.

இந்தியாவில் இருந்து, சரக்குகளை, சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்து தருவதாக, மகராஜ் என்ற தொழிலதிபரிடம் இருந்து இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 33 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

கடந்த 2015 ல் தொடரப்பட்ட இந்த வழக்கில் அவருக்கு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டாலும், ஆஷிஷ் லதா ராம்கோபின் திங்கள்கிழமை நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். டர்பன் சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றத்தால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உள்ளது.

இப்போது தீர்ப்பு வெளியாகி, மேல்முறையீடு செய்ய முடியாது என்ற நிபந்தனையுடன் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Paid Ad
Previous articleஐ.பி.எல். போட்டித் தொடர் குறித்து வெளியான புதிய தகவல்
Next article2ஆவது லங்கா பிரிமியர் லீக் தொடருக்கான திகதி அறிவிப்பு!