கம்பஹா மாவட்டத்திலிருந்து வாரமொன்றுக்கு 400 இற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் வாராந்தம் 100 பேர் பதிவாகி வருவதாக சமூக வைத்திய நிபுணர் திருமதி நிமல்கா பன்னிலஹெட்டி குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு நோயினால் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இரு குழந்தைகள் உட்பட 22 பேர் பலியாகியுள்ளனர்.










