” பெறுமதி சேர் வரியை (வெற் வரி) 18 சதவீதமாக அதிகரிப்பது வரி சூத்திரத்தை குழப்பியடிக்கும் செயல் என்பதுடன், இந்த பிற்போக்கான வரி அதிகரிப்பானது மக்கள்மீது மேலும் சுமையை திணிக்கும் செயலாகும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழுவுடன் நேற்று (31) நடந்த கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரச வரி நிர்வாகத்தில் எந்தவொரு மாற்றத்தையும் அரசு செய்யாதுள்ளது , வரி நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்குதல், நவீனமயமாக்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றின் மூலம் அரச வருவாயை அதிகரிக்க முடியும் , இவ்வாறு வரி செலுத்தாதோர் தொடர்பில் உகந்த நடவடிக்கையும், அறவீட்டையும் மேற்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சாதாரண மக்களிடமிருந்து வரி வருவாயை அதிகரித்து அரச முற்படுகின்றது.
பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்து சாதாரண மக்களின் வரிச்சுமையை அதிகப்படுத்துவது கீழ்த்தரமான செயலாகும்.”










