” மக்கள் பிரச்சினையை வைத்து அரசியல் நடத்தவில்லை – தீர்வை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு” – ஜீவன்

” மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அனைத்து மலையக அரசியல் வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாமும் இருக்கின்றோம்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஊடக அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி, கஹவத்த பெருந்தோட்ட நிறுவனத்துக்கு உட்பட்ட வெள்ளந்துரை தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம்போல் இனி எங்கும் நடக்ககூடாது என்பதால்தான் மலையக மக்களுக்கு காணி உரிமை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

” வெள்ளந்துரை தோட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மாணவி பல்கலைக்கழகம் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும், புலமைப்பரிசிலொன்றையும் வழங்கவுள்ளோம். அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இதனை நாம் எழுத்துமூலம் கோரியுள்ளோம்.

இச்சம்பவத்தை வைத்துக்கொண்டு நாம் அரசியல் நடத்த முற்படவில்லை. மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம். மலையக அரசியல் வாதிகள் கண்டனம் தெரிவிக்கின்றனர், ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்படும் என ஒரு அரசியல்வாதி கூறுகின்றார். இப்படியான பிரச்சினைகள் பற்றிபேசி தீர்வைக்காணவே ஜனாதிபதியுடன் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதில் பங்கேற்காமல் நடை பயணம் சென்றனர்.

ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்பதற்காக அனுசரித்து செல்கின்றோம். மக்களுக்காக பொறுமை காக்கின்றோம். எனவே, மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மலையக அரசியல்வாதிகள் ஒன்றுபட வேண்டும். சிவில் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் நாம் பேச்சு நடத்தவுள்ளோம். காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. ” – என்று அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles