மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை தெஹியோவிட்ட ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்​கை நீடிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை பிரதேச செயலக பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல, கலவான, எலபாத்த, எஹெலியகொட, இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலக பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, கிரியெல்ல, பெல்மடுல்ல, அயகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் வாழும் மக்களை மிகுநுத் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles