மண்மேடு சரிந்து விழுந்ததில் 18 வயது பிக்கு பலி – பேராதனையில் பெருந்துயர்!

மண்மேடு சரிந்து விழுந்ததில் 18 வயது பிக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.

பேராதனை, ஏந்தடுவாவ புராதன விகாரை வளாகத்திலேயே நேற்று மாலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

விகாரையின் மேல் முற்றத்தில் குறித்த தேரர் வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையிலேயே மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் மண்ணுக்குள் புதையுண்டு படுகாயமடைந்த தேரர் பேராதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Articles

Latest Articles