மது போத்தலுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்

சிலாபத்தில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவர் மது போத்தலை திருட்டு தனமாக பாடசாலைக்கு கொண்டு வந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஒன்பதாம் ஆண்டு படிக்கும் மாணவன் பிரதான வாயில் வழியாக பாடசாலைக்குள் நுழைந்தபோது, ​​மாணவ தலைவர்கள் அவரது பையை சோதனையிட்டபோது ​​இந்த மது போத்தல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த மாணவனை, மாணவ தலைவர்கள் மது போத்தலுடன் அதிபரிடம் கையளித்துள்ளனர்.

தனது தந்தை வீட்டிற்கு கொண்டு வந்திருந்த விஸ்கி போத்தலை நண்பர்களுடன் குடிப்பதற்காக கொண்டு வந்ததாக மாணவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாணவனை கடுமையாக எச்சரித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles