மத்திய மாகாண O/L முன்னோடி பரீட்சை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

நவராத்திரி விழா நிமித்தம் மத்திய மாகாண பாடசாலைகளில் இம்மாதம் 23ஆம் திகதியிலிருந்து நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி பொதுத்தராதர சாதாரணதர முன்னோடிப் பரீட்சையை 25ஆம் திகதி முதல் நடைபெற ஏற்பாடு செய்யுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் மத்திய மாகாண ஆளுனர் லலித் யு. கமகேவிடம் கடிதம் மூலம் விடுத்தவேண்டுகோளிற்கிங்க பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.

தமிழ் பாடசாலைகளில் நவராத்திரி விழா சார்ந்த பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். அவ்வகையில் இவ்வருடமும் இம்மாதம் 15ம் முதல் 24ம் திகதி வரை பூஜை வழிபாடுகள் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் மத்திய மாகாண பாடசாலைகளில் கல்வி பொதுத்தராதர சாதாரணதர முன்னோடி பரீட்சை இம்மாதம் 23ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 2ம் திகதி வரை நடைபெற மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இவ் ஏற்பாடானது நவராத்திரி விழா தமிழ் பாடசாலைகளில் இடம்பெறுவதற்கு ஒரு தடையாகவிருக்கும் என்ற விடயம் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாரின் கவனத்திற்கு மலையக ஆசிரியர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் கொண்டுவரப்பட்டது.

அதனை தொடர்ந்து கல்வி இராஜாங்க அமைச்சர் இவ்விடயம் தொடர்பாக ஒரு நீண்ட விளக்கக் கடிதத்தை மத்திய மாகாண ஆளுனருக்கு அனுப்பியதோடு பரீட்சையை பிற்போடுமாறும் கேட்டுக்கொண்டார். இதன் தார்ப்பரியத்தை புரிந்துக்கொண்ட மத்திய மாகாண ஆளுனர் உடனடியாக செயற்பட்டு கல்வி பொதுத்தராதர சாதாரணதர முன்னோடிப் பரீட்சையை எதிர்வரும் 25ம் திகதி புதன்கிழமை ஆரம்பித்து நவம்பர் மாதம் 4ம் திகதி முடிவுறும் வண்ணம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles