மத போதகர் ஜெரம் பெனாண்டோ நாடு வந்தடைந்ததும் கைது செய்யப்படுவார்

மதங்களை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பிரசங்கம் வழங்கிய கிறிஸ்தவ மத போதகர் ஜெரம் பெனாண்டோ இலங்கை வந்தடைந்ததும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் ஆலோசகர், ஜனாதிபதி செயலணியின் பிரதம அதிகாரி சாகல ரத்நாயக்கவிடம் இவ்வுத்தரவை பிறப்பித்திருந்தார்.

அதற்கமைய அவருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர் நாட்டை விட்டுச் செல்வதை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றில் உத்தரவை நேற்று (16) பெற்றிருந்தனர்.

இந்நிலையில், அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்தவ மத போதகர் என தம்மை அடையாளப்படுத்தும் ஜெரோம் பெனாண்டோ எனும் நபர் ஆற்றிய பிரசங்கம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அதில், பௌத்தம், இந்து, இஸ்லாம் உள்ளிட்ட மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளார்.

இதேவேளை, சிங்கப்பூர் சென்றுள்ள பாதிரியார் ஜெரோம் பெனாண்டோ தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் புகைப்படம் மற்றும் இடுகையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த இடுகைக்கு அமைய, தான் தற்போது ஏற்கனவே திட்டமிடப்பட்ட உத்தியோகபூர்வ விடயங்கள் தொடர்பில் வெளிநாடு சென்றுள்ளதாகவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) இலங்கை திரும்பவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles