மனித பாவனைக்காக வழங்கப்படும் குடி நீரில் மலக்கழிவுகள்

கம்பளை தொழுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு மனித பாவனைக்காக வழங்கப்படும் குடி நீரில்  மலக்கழிவுகள் (E colai bacteria) கலந்திருப்பதாக சுகாதார பிரிவினர் தெவிக்கின்றனர்                                                 
மேற்படி குடி நீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வைகாணும் நோக்கில்  இன்று (25) தொலுவ ஸ்ரீ பிம்பாராமய விகாரையில் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரட்ண மற்றும் பிரதேச செயலாளார் யமுனா தயாரட்ண ஆகியோரின் தலைமையில் கம்பளை உடபளாத்த பிரதேச செயலாளர் மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகள் குழுவினருடனான   கலந்துரையாடல் ஒன்று இடம் பெற ஏற்பாடாகியுள்ளது                                                                                       
மேலும்  ஈ கோளய் பக்டீரியா தொற்றுகிருமிகள் கலந்துள்ள நீரை அருந்தியமைனாலேயே தொலுவ குருகெலே பிரதேசத்தைச்சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் உயிரிழந்தமை சுகாதார தரப்பினரால் உறுதி படுத்தப்பட்டுள்ளது
தொலுவ பிரதேசத்திக்குட்பட்ட பல்லேதெல்தொட்ட, வாரியகல,புபுரஸ்ஸ,லெகுந்தெனிய,கொங்கா ஓயா ஆகிய பிரதேசங்களிலிருந்து ஓடைகள் நீரூற்றுக்கள் உட்பட 31 நீர் நிலைகளிலிருந்து பெறப்படும் மேற்படி நீரினை தொலுவ பிரதேச  செயலகத்திற்கு உட்பட்ட   15,000 குடும்பங்களும் உடபளாத்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒரு பகுதியினரும் குடி நீராக பயன்படுத்தி வருகின்றனர்
மேற்குறிப்பிட்ட நீர் நிலைகளை பரீட்சித்துபார்த்ததில் மனித குடியிருப்புக்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மலசல கழிவுகளை வடிகான் களில் வெளியேற்றுதல் குரங்கு பன்றிகளின்  எச்சங்கள்  என்பன கலந்துள்ளமை  தெரியந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது                                                                                                                                                                                                                                              கம்பளை நிருபர்
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles