மலையகத்தில் முதலீடு செய்யுங்கள் – இந்திய தமிழ் வம்சாவளியினரிடம் ராதா கோரிக்கை

” இந்திய தமிழ் வம்சாவளியினர் மலையகத்தில் முதலீடுகளை செய்ய முன்வர வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஸ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஏற்பாட்டில சென்னையில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக மாநாட்டின் நிறைவு நாளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராதாகிருஷ்ணன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

இம் மாநாட்டிற்கு உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் ஜே.செல்வகுமார் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றி வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமைக்கு சென்றபோது அதனை மீள கட்டியெழுப்புவதற்கு அதிக பங்களிப்பை செய்த நாடு இந்தியா என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே எங்களுடைய இந்திய வம்சாவளி தமிழர்கள் அனைத்து நாடுகளிலும் பறந்து வாழ்கின்றார்கள். அவர்களில் அநேகமானவர்கள் இன்று பொருளாதார ரீதியாக உயர்ந்த இடத்தில் இருக்கின்றார்கள் . எனவே அவர்கள் அனைவரும் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன் வர வேண்டும்.

அப்படி முதலீடு செய்வதற்கு முன்வருகின்றவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். குறிப்பாக இலங்கையின் மலையக பகுதிகளில் அதாவது அதிகமாக இந்திய வழிசாவளி தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களில் தங்களுடைய முதலீடுகளை செய்ய முன்வருவார்களானால் எங்களுடைய மக்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அது ஒரு உந்து சந்தியாக அமையும்.

இலங்கையில் எங்களுடைய மலையக இளைஞர் யுவதிகளுக்கு அனைத்து திறமைகளும் உள்ளன. ஆனால் அவர்களுக்கு சந்தர்ப்பம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது.பொருhளாதார ரீதியாக நாங்கள் பின்னடைந்தவர்களாகவே இருக்கின்றோம்.எங்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இங்குள்ள அதாவது இந்த மாநாட்டில் பங்குபற்றியுள்ள முதலீட்டாளர்கள் முன்வருவார்களானால் அது இந்த மாநாட்டிற்கு கிடைத்த ஒரு வெற்றியாக நான் கருதுகின்றேன். ” – என்றார்.

Related Articles

Latest Articles