மத்திய மாலைநாட்டில் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வீதிகளின் இருபுறமும் GALVANIES பூசப்பட்ட பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் வாகன விபத்துக்கள் ஏற்பட்ட இடங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் விபத்துக்கள் ஏற்படக்கூடிய சுமார் 500 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
அவற்றில் 40 இடங்களுக்கான பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்தது.