மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு தலவாக்கலை, டெவன் தோட்டத்திலுள்ள சிவனு லெச்சுமணனின் நினைவிடத்தில் நினைவேந்தல் இடம்பெறும்.
அதன்பின்னர் பிற்பகல் 4 மணிக்கு வட்டகொடை மணிப்பூர் சிறுவர் நிலைய முன்றலில் நினைவுரைகள் இடம்பெறவுள்ளன.










