மலையக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் – ஜனாதிபதி

” பெருந்தோட்ட மக்களுக்கு சட்ட ரீதியிலான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. எனினும், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் இன்னும் எஞ்சியுள்ளன. இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக
மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றேன்.

200 வருடங்களாக இலங்கையின் பொருளாதாரத்தை வளம்பெறச் செய்வதற்கு பாடுபடும் அவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை மக்களின் ஒரு பிரிவினராக மாற்றப்பட வேண்டும்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய அரச கொள்கை விளக்க உரையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

Related Articles

Latest Articles