தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகி வரும் மாணவி ஒருவரைப் பாடசாலையில் கொடூரமாகத் தாக்கினார் என்று கூறப்படும் ஆசிரியர் ஒருவரை ஹுங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டார் என்று ஹுங்கம பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
தனது மகளை ஆசிரியர் தொடர்ந்தும் தாக்கினார் என்று குறித்த தாய் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சிறுமி தற்போது தங்காலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ஆசிரியர் சிறுமியின் வகுப்பாசிரியர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
