இரத்தினபுரி – எஹலியகொட பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவியொருவரை, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர், மரபணு (DNA) பரிசோதனையின் ஊடாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பலிகல பகுதியில் வைத்து இந்த சந்தேகநபர் நேற்றைய தினம் (செப்.28) கைது செய்யப்பட்டதாக எஹலியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எஹலியகொட – கொஸ்கஹமுகலன பகுதியில் பாடசாலை முடிவடைந்து, வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணைகள் அவிசாவளை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையிலேயே, சந்தேகநபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
