” மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நீதிக்காக அவரது பெற்றோர் பலவழிகளிலும் போராடியுள்ளனர். எனினும், பாதிக்கப்பட்ட மாணவியே பாடசாலையில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். பாடசாலை மட்டத்தில் முறையான விசாரணை நடக்கவில்லை என்பதுதான் பெற்றோரின் குற்றச்சாட்டு.
நடந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை மற்றும் கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படியான சம்பவம் நடந்திருக்காது.
எனவே, இச்சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை அவசியம். பொலிஸ்மா அதிபருக்கு இது தொடர்பில் எழுத்துமூலம் அறிவித்துள்ளோம்.”
இவ்வாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.










