‘மாதம் 8 நாட்களே வேலை’ – கொட்டியாகலையில் தொழிலாளர்கள் போராட்டம்!

பொகவந்தலாவ, கொட்டியாக்கலை கீழ்ப்பிரிவு மற்றும் மத்தியப்பிரிவு தோட்டத்தொழிலாளர்கள் தமது தொழில் உரிமைகளை வலியுறுத்தியும், தோட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகளைக் கண்டித்தும்   போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் வருமாறு,

” வாரம் இரு நாட்கள் வீதம் மாதத்தில் 8 நாட்களே வேலை வழங்கப்படுகின்றன. இதனால் சம்பளம் குறைந்துள்ளது. கிடைக்கும் சொற்பளவு சம்பளத்தை வைத்து என்ன செய்வது, பிள்ளைகளுக்கு டேடா காட் வாங்குவதா, உணவு வாங்குவதா?

அதுமட்டுமல்ல நெருக்கடியான சூழ்நிலையிலும் 18 கிலோ கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகங்கள் வலியுறுத்துகின்றன. ஒரு புறம் வாழ்வாதாரம் பாதிப்பு. மறுபுறம் தொழில் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, எமக்கு நீதி வேண்டும். இ.தொ.காவின் தோட்ட தலைவர், நிர்வாகத்துடன் இணைந்து தன்னிச்சையாக முடிவெடுக்கின்றார். இதனை ஏற்கமுடியாது.” – என்றனர்.

நீலமேகம் பிரசாந்த்

Paid Ad
Previous article‘இந்திய டெல்டா திரிபுடன் இலங்கையில் மேலுமொருவர் அடையாளம்’
Next articleX-Press Pearl கப்பலில் எண்ணெய்க் கசிவா?