கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கனுவவன்வ பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் நேற்று (23) மாலை கேபிள் அன்டனா பொருத்தச் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை கன்வன்வ மஹியங்கன வீதியில் 16 கட்டையில் வசிக்கும் 56 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நேற்று மாலை 5 மணியளவில் வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியின் ஆன்டெனாவை சரி செய்வதற்காக அருகில் உள்ள மரத்தில் மீது ஏறி வயரை தூக்கி எறிந்தபோது வயர் உயர் அழுத்த மின்கம்பியில் மோதியதில் மின்சாரம் பாய்ந்தது இவ் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேதம் பதுளை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
ராமு தனராஜா
