மண்மேடு சரிந்து வயோதிபர் பலி: நாவலப்பிட்டியவில் சோகம்

நாவலப்பிட்டிய, சோலங்கந்தை பகுதியில் இன்று மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 65 வயது ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வர்த்தக நிலையமொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 48 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles