சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்ஙகளைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெள்ளப் பெருக்கில் சிக்கி இருவரும், மண்சரிவில் சிக்கி நால்வருமாக இதுவரை மொத்தம் 6 பேர் காணாமல்போயுள்ளனர்.
சீரற்ற காலநிலையல் மூவர் காயமடைந்துள்ளனர்.
இதுவரை 439 குடும்பங்களைச் சேர்ந்த 1,734 பேர் இடம்பெயர்ந்து 7 தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான சகல வசதிகளையும் நுவரெலியா மாவட்ட செயலகம் ஊடாக முன்னெடுத்து வருவதாக மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.










