அக்கரப்பத்தனை, சென் ஜோர்ஜ் தோட்டப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், கறிமிளகாய், கோவா (முட்டைக்கோஸ்), போஞ்சி உள்ளிட்ட பயிர்கள் முற்றாக நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளன.
இதனால் தங்களுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
(தகவல்: ர.ரகு)










