டயகம கிழக்கு பகுதியில் மின்சாரம் தாக்கி தோட்டத்தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று மாலை 3 மணியளவிலேயே அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
டயகம கிழக்கு மூன்றாம் பிரிவை சேர்ந்த 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான இராமகிருஸ்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த தொழிலாளி, தொழிற்சாலை உத்தியோகத்தரின் பணிப்பின் பேரில் , அவரின் வசிப்பிட தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற போது – தோட்டத்தில் விலங்குகளின் பாதுகாப்புக்கு பொறுத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த தோட்டத்தொழிலாளியின் உடல் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நீலமேகம் பிரசாந்த்










