மீன்பிடிக்கச்சென்ற தந்தையும், மகனும் சடலங்களாக மீட்பு!

மட்டக்களப்பு , வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி கடலில் மீன்பிடிக்க சென்ற தந்தையும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இருவரும் நேற்று (16) மாலை 4.15 மணியளவில் படகொன்றில் மீன்பிடிக்க சென்ற நிலையில் இன்று வரை கரைக்கு திரும்பாததையடுத்து உறவினரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து உயிர்பாதுகாப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் இன்று (17) மாலை 05 மணியளவில் தந்தை மற்றும் மகனின் சடலங்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அனர்த்தத்தில் 56 வயதான தம்பிமுத்து திசாநாயகம் என்பவரும் அவரது 21 வயதான மகன் திசாநாயகம் அகிலவாசனுமே உயிரிழந்துள்ளனர்.

மீன்பிடித்தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட இவர்கள், காயங்கேணி – மாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் கடற்கரையிலேயே வைக்கப்பட்டுள்ளதுடன் நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles