” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து என்னை நீக்கியுள்ளனரா….? அது பற்றி எனக்கு தெரியாது. கடிதம்கூட அனுப்படவில்லை.” – என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸை நீக்குவதற்கு கட்சியின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளது என மொட்டு கட்சியின் செயலாளர் அண்மையில் அறிவித்தார்.
இது தொடர்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பீரிஸிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,
” என்னை பதவி விலக்குவதாக இருந்தால் அது பற்றி முதலில் எனக்குதான் அறிவிக்க வேண்டும். அவ்வாறு எந்தவொரு கடிதமும் வரவில்லை. அவ்வாறு வந்ததும் எனது பதிலை வழங்குவேன். இல்லாத ஒன்றுக்கு கற்பனை அடிப்படையில் பதில் வழங்க முடியாது.” – என்றார் பீரிஸ்.
