உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தனது அணுக்கொள்கையில் மாற்றம் செய்திருக்கிறது. இதன் மூலம் மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சம் எழுந்திருக்கிறது.
உக்ரைனுக்கும், அமெரிக்காவுக்குமான உறவு உலகம் அறிந்ததுதான். ஆனால், இந்த இரண்டு நாடுகளும் சேர்ந்து, நேட்டோ அமைப்பு மூலம் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினர்.
இதுதான் இப்போது நடக்கும் ரஷ்ய-உக்ரைன் போருக்கான தொடக்கப்புள்ளி. சிம்பிளாக சொல்வதெனில், ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன், இப்போது நேட்டோவை ஆதரித்து வருகிறது. விரைவில் இது நேட்டோவில் இணையவும் இருக்கிறது.
இப்படி நடந்தால், ரஷ்ய எல்லையில் அமெரிக்காவின் நேட்டோ படைகள் நிலை நிறுத்தப்படும். எனவேதான் ரஷ்யா கொந்தளித்து போரில் இறங்கி இருக்கிறது. இந்த போரில் ஆயிரக் கணக்கானோரை இரு நாடுகளும் இழந்திருக்கின்றன.
போர் உச்ச கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் விரைவில் ரஷ்ய படைகளால் கைப்பற்றப்படும் என்கிற சூழல் உருவாகியிருக்கிறது. அப்படி மட்டும் நடந்துவிட்டால், அமெரிக்காவின் மவுசு குறைந்துவிடும். தன்னை நம்பி வந்த ஒரு சிறிய நாட்டை கூட அமெரிக்காவால் காப்பாற்ற முடியவில்லை என்கிற பெயர் உருவாகிடும். இதற்கு இடம் கொடுக்க விரும்பாத அமெரிக்கா.
உக்ரைனுக்கு அதிகமான ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது. இப்படி பெறப்பட்ட ஆயுதங்களை கொண்டு நேரடியாக மாஸ்கோ நகர் மீதே உக்ரைன் தாக்குதலை தொடுத்திருக்கிறது. உக்ரைனின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது தனது அணு ஆயுத கொள்கையில் ரஷ்யா மாற்றம் செய்திருக்கிறது.
நேற்று பாதுகாப்பு படை தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அதிபர் புதின், ரஷ்யவின் அணு ஆயுத கொள்கையில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்.
அதன்படி, ரஷ்யா மீது தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு (உக்ரைன்), வேறு நாடுகள் (அமெரிக்கா) அணு ஆயுத உதவி வழங்கினால் அது கூட்டு தாக்குதல் என்று அர்த்தப்படும் என்றும், விமானம், கப்பல் மற்றும் ட்ரோன்கள் மூலம் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால், எங்களின் அணு ஆயுத கொள்கைளில் திருத்தம் செய்யப்படும் என்றும் மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இந்த திருத்தம் மூலம் ரஷ்யா போரில் அணு ஆயுதங்களை இறங்க வழிவகுத்திருக்கிறது. அதேபோல அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு நாடுகள் கொடுக்கும் ஆயுதங்களுடன் ரஷ்யாவுக்குள் நுழையும் பட்சத்தில் அவர்கள், ரஷ்ய வீரர்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்த வேண்டும் என்று ரஷ்யா போர் கொள்கையில் திருத்தம் மேற்கொண்டிருக்கிறது.
இந்த திருத்தங்கள் அணு ஆயுத பயன்பாட்டுக்கு வழி வகுக்கும் என்றும், அணு ஆயுதம் மூன்றாம் உலகப்போருக்கான தொடக்கப்புள்ளி என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.