உலகக் கிண்ண கால்பந்து திருவிழா 11 ஆம் திகதி ஆரம்பம்!

4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்து திருவிழா எதிர்வரும் 11 ஆம் திகதி மிகவும் பிரமாண்டமாக ஆரம்பமாகவுள்ளது. ஜுலை 19 ஆம் திகதிவரை போட்டிகள் நடைபெறவுள்ளன.

வழமைக்கு மாறாக இம்முறை 32 அணிகளுக்குப் பதிலாக மொத்தம் 48 அணிகள் களமிறங்குகின்றன.

உலகக் கிண்ண கால்பந்து தொடரை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

3 நாடுகளில் மொத்தம் 16 மைதானங்களில் போட்டி நடைபெறும்.
போட்டிகள் இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.30 மணி, அதிகாலை 3.30 மணி, காலை 6.30 மணி, 9.30 மணி ஆகிய நேரங்களில் நடைபெற உள்ளன.

குரூப் சுற்றின் முடிவில், ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் மற்றும் குரூப் வாரியாக 3-ம் இடம் பெறும் 8 அணிகளும் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் 32) தகுதி பெறும்.

அதன்பின்னர் கால், அரை, இறுதிச் சுற்றுப் போட்டிகள் அரங்கேறும். மொத்தம் 104 ஆட்டம், 16 நகரங்களில் மிக பிரமாண்டமாக அமைந்துள்ள மைதானங்களில் விளையாடப்படவுள்ளன.

Related Articles

Latest Articles