மைத்திரியின் கருத்தால் தெற்கு அரசியலில் பரபரப்பு

முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே சாகவில்லை, அவர் சாகடிக்கப்பட்டுள்ளார் என மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்தும் தெற்கு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

களுத்துறை மாவட்டத்துக்கான வேட்புமனு ஒதுக்கீடு தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் ரெஜினோல்ட் குரே, சுதந்திரக்கட்சி சார்பில் பங்கேற்றிருந்தார். இதன்போது அவருக்கும் மாற்று கட்சி உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. கெவிந்து குமாரதுங்கவுக்கும், குரேவுக்கும் இடையில் கடும் சொற்சமரும் மூண்டுள்ளது.

இதனால் உளரீதியில் பாதிக்கப்பட்ட ரெஜினோல்ட்குரே அகால மரணமடைந்தார். மாரடைப்பு எனக் கூறப்பட்டது.

முன்னதாக ‘ஹொலிகொப்டர்’ கூட்டணியில் இணைந்திருந்த சுதந்திரக்கட்சி மேற்படி சம்பவத்தையடுத்து கூட்டணியில் இருந்து ஒதுங்கி, தனி வழி செல்லும் அறிவிப்பை விடுத்தது. இதற்கு பல்வேறு காரணங்களும் கூறப்பட்டன.

ஆனால் ரெஜினோல்ட் குரேயின் மரணத்தையடுத்தே சு.க. முடிவை மாற்றியது என குறிப்பிட்டுள்ள மைத்திரி, அவர் சாகவில்லை, சாகடிக்கப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரியின் இந்த அறிவிப்பு விமல், டலஸ் உள்ளிட்ட தரப்பை கொதிப்படைய வைத்துள்ளது. இனிமேல் மைத்திரியை கூட்டணியில் இணைக்ககூடாது என பலரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

Related Articles

Latest Articles