ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜனவின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படும் முடிவை எடுத்துவருகின்றனர்.
முதலாவது உறுப்பினராக பெலியத்தை பிரதேச சபையின் மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவர் நேற்று தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.
மக்கள் பக்கம் நின்று தான் இந்த முடிவை எடுத்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
