மொட்டு கட்சியின் புதிய தவிசாளராக உத்துராவல தம்மரதன தேரர் நியமனம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தவிசாளராக சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்துக்குரிய உத்துராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்சபைக்கூட்டம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போதே புதிய தவிசாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மொட்டு கட்சியின் தவிசாளராக செயற்பட்டுவந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தற்போது டலஸ் அணி பக்கம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles