மொட்டு கட்சியின் மூன்றெழுத்து ஜனாதிபதி வேட்பாளர் பஸிலா?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு பஸில் ராஜபக்ச தகுதியானவர் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, அக்கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி தேர்தலுக்கு நாம் தயாராகிவருகின்றோம். அதற்கிடையில் எந்த தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்ளவும் தயார். கடந்தமுறை இறுதி நேரத்தில்தான் மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டார், இம்முறையும் இறுதி நேரத்தில் பெயர் திரைநீக்கம் செய்யப்படும்.

கோட்டாபயவுக்கு பதிலாக பஸில் ராஜபக்சவை களமிறக்குமாறு கடந்தமுறையும் நான் வெளிப்படையாக கூறியிருந்தேன். அடுத்த முறை களமிறங்குவதற்கும் பஸில் ராஜபக்ச பொருத்தமானவர் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன்.”  – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles