மொத்த செலவீனங்களில் பாதுகாப்பு அமைச்சுக்கு 10 வீத ஒதுக்கீடு!

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வரவு – செலவுத் திட்ட செலவீனங்களில் 10 வீதம் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது – என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார் .

2023 ஆம் நிதியாண்டுக்கான பாதீடு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” மொத்த செலவீனத்தில் 5 வீதத்தையே எமது அயல் நாடுகள் பாதுகாப்புக்காக ஒதுக்கும் நிலையில், இலங்கை 10 வீதத்தை ஒதுக்கியுள்ளது. இந்தியாவில்கூட 9 சதவீதமே ஒதுக்கப்படுகின்றது. அந்தவகையில் பாதுகாப்புக்கான ஒதுக்கீடு அதிகமென தோன்றுகிறது.

அதேவேளை, கடும் பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ளது. இந்நிலைமையில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார். இதனை பாராட்டுகின்றோம். பரிந்துரைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles