மோட்டார் சைக்கிள் மோதியதில் சுத்திகரிப்பு தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பதுளை, பண்டாரவளை வீதியில் பண்டாரவளை தம்ரோ காட்சியகத்துக்கு முன்பாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பண்டாரவளை மாநகரசபையில் பணியாற்றும் 36 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் சுத்திகரிப்பு தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையிலேயே அவர்மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. படுகாயமடைந்த அவர், தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த 19 வயது இளைஞனும் காயம் அடைந்துள்ளார். அவர் தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.
விபத்து தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
ராமு தனராஜா










