யாழில் இரு சிறுமிகள் மீது வன்புணர்வு

யாழ்., தென்மராட்சி, சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 15 வயது சிறுமிகள் இருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மகா சிவராத்திரி அன்று வீட்டில் உள்ளவர்கள் ஆலயத்துக்குச் சென்றிருந்த நிலையில், தனியாக நின்றிருந்த 15 வயதுச் சிறுமியை நபர் ஒருவர் வன்புணர்வுக்குள்ளாக்கியுள்ளார்.

வீட்டாரைக் கண்டதும் அவர் தப்பித்துச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 15 வயதான இன்னொரு சிறுமியை கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 23 வயது இளைஞர் ஒருவர் அழைத்து வந்து வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி மருத்துவ சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்

Related Articles

Latest Articles