யாழ்ப்பாணத்து மக்களே போரை மறந்துவிட்டனர், பிரிட்டனின் நோக்கம்தான் என்ன?

“யாழ்ப்பாணத்து மக்களே போரை மறந்து சிங்கள தலைவர்கள் உள்ள அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள சூழ்நிலையில், படையினரை இலக்கு வைத்து பிரிட்டன் தடைகளை விதிப்பதன் நோக்க என்ன, இதன் பின்னணியில் செயற்படுவது யார்?”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கேள்வி எழுப்பியுள்ளார்.

போலியான போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து படையினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் இடமளிக்கப்படவில்லை எனவும், தற்போது அதற்குரிய முயற்சி எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தல் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, இது தொடர்பில் மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம் மேலும் கூறியவை வருமாறு,

‘ மூன்று படைத்தளபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட இலங்கையர்கள் நால்வருக்கு பிரிட்டனால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. சிவில் போரின்போது மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டன, சட்டத்துக்கு புறம்பான படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட காரணங்களுக்காகவே இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புலிகள்தான் உலகில் உள்ள பயங்கரமான பயங்கரவாத அமைப்பாகும். இப்படிபட்ட ஒரு அமைப்புடன் போரிட்டு வெற்றிபெறுவதற்கு பங்களிப்பு செய்த படையினர் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

போர் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளன. யாழ்ப்பாணத்து மக்களே போரை மறந்து, சிங்கள தலைவர்கள் உள்ள அரசாங்கத்தக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

இப்படியான சூழு;நிலையில் மீண்டும் இப்படியொரு சம்பவம் இடம்பெறுவது ஏன்? இதன் பின்னணியில் இருப்பவர்கள், ஒத்துழைப்பு வழங்குபவர்கள் யார் என்ற பிரச்சினையும் எமக்கு உள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை பிரிட்டனுக்கும், சர்வதேசத்தக்கும் ஜனாதிபதி வழங்க வேண்டும்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் படையினருக்கு எதிராக போலியாக போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இடமளிக்கப்படவில்லை. தற்போது அதற்குரிய முயற்சி மீண்டும் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

போரை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டிய படையினருக்காக நாம் என்றும் முன்னிற்போம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles