ரஜினியின் ‘நான் அடிமை இல்லை’ பட இசை அமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்

ரஜினிகாந்த் நடித்த ‘நான் அடிமை இல்லை’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்த விஜய் ஆனந்த் காலமானார். அவருக்கு வயது 71.

இயக்குநர் விசுவின் நாடகங்களுக்கு இசை அமைத்து வந்தவர் விஜய் ஆனந்த்.விசு இயக்கி 1984-ம் ஆண்டு வெளியான ‘நாணயம் இல்லாத நாணயம்’ படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். தொடர்ந்து, காவலன் அவன் கோவலன், ஊருக்கு உபதேசம், ராசாத்தி வரும் நாள், ரஜினிகாந்த் நடித்த, ‘நான் அடிமை இல்லை’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்தார்.

‘நான் அடிமை இல்லை’ படத்தில் இடம் பெற்ற ’ஒரு ஜீவன் தான்…’ பாடல் மூலம் மிகவும் பிரபலமான இவர், தமிழில் சுமார் 25 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கன்னடத்தில் 180 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜய் ஆனந்த் நேற்று முன் தினம் காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு பெருங்களத்தூரில் நேற்று நடந்தது.

மறைந்த விஜய் ஆனந்துக்கு அமலி என்ற மனைவி ஜெனிபர் என்ற மகள் உள்ளனர். விஜய் ஆனந்த் மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles