ரஷ்யாவை மேற்குலகம் புறக்கணித்துவரும் நிலையில், அந்நாட்டு அதிபர் புடினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை ரஷ்யா செல்லும் சீன ஜனாதிபதி, மூன்று நாட்கள் அங்கு முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்பயணத்தில் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், உக்ரைன் போர் விவகாரம் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைன் பக்கமே மேற்குலகம் நிற்கின்றது. ஆயுதங்களையும் வழங்கிவருகின்றது.
இந்நிலையில் சீன ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.