ரிஷாட்டின் கட்சியை புறக்கணித்தது என்? மனோ, ஹக்கீமிடம் பாயிஸ் கேள்வி

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில், மூன்று கட்சிகள் இணைந்து நடத்திய சந்திப்பு, பாதிக்கப்படப்போகும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும், சிறு கட்சிகளுக்கும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.ஜே.எம்.பாயிஸ், இந்தச் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

தேர்தல் முறைகளை மாற்றவேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கமும் ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவும் விடாப்பிடியாக நின்று காய்களை நகர்த்தி வரும் இத்தருணத்தில், அனுர குமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி யும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசும், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும், கொழும்பில் நேற்று (30) சந்தித்து, இது தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன் காத்திரமான முடிவுகளையும் மேற்கொண்டிருப்பதாக இன்று ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது.

கடந்த காலங்களில் இவ்வாறான அனைத்து சந்திப்புக்களிலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அழைக்கப்பட்டிருந்ததுடன் அதன் தலைவர் ரிஷாட் பதியுதீன் பிரதான பாத்திரமும் வகித்திருந்தார்.

கடந்த அரசின் அரசியலமைப்பு வழிகாட்டல் குழு, அரசியல் யாப்பு சபையிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கிய பங்காற்றியதுடன், இந்தக் கட்சிகளுடன் இணைந்து கூட்டாகவும் தனியாகவும் அறிக்கைகள் சமர்ப்பித்திருந்தமையையும் நாம் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் நான்கு எம்.பி க்களையும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் சுமார் 150 க்கு மேற்பட்ட பிரதிநிதிகளை பெற்றிருப்பதும், 08 உள்ளூராட்சி சபைகளை ஆளுகை செய்வதும் வெளிப்படையானது.

அத்துடன், மேல் மாகாண சபை உட்பட நாட்டின் பல மாகாண சபைகளில் பிரதிநிதிகளையும் வென்றெடுத்திருக்கின்றது. இந்தச் சூழலில் கட்சித் தலைவர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், அனுர குமார திசாநாயக்க ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஓரங்கட்டியது ஏன்?

தலைவர் ரிஷாட் பதியுதீனை தடுப்புக் காவலில் வைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு மேலும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் தொடர்பில் ஆராயும் தெரிவுக்குழுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடம்பெறாத நிலையில், ஆகக் குறைந்தது இவ்வாறான கூட்டங்களிலாவது கட்சியை அழைத்திருக்க வேண்டுமல்லவா?

தலைவரின் தடுப்புக் காவலையடுத்து கட்சியின் உயர்பீடம் கூடி, அவரது பொறுப்புக்களை சில முக்கியஸ்தர்களுக்கு பகிர்ந்தளித்துள்ள நிலையில், பிரதித் தலைவர், செயலாளர், தவிசாளர் ஆகியோருக்கேனும் அழைப்பு விடுத்து இந்தக் கூட்டத்தில் கட்சியின் பிரதிநிதிகளுக்கு அந்தஸ்து வழங்கியிருக்கலாமே.

இவ்வாறு மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாயிஸ் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles