ஒருநாள் விமானப் பணிப்பெண்: 11 வயது சிறுமியின் கனவு நனவானது!

ஆஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியான திரிஷா (Trisha), சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுப் பின்னர் வெற்றிகரமாகச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்.

அவரது நீண்ட நாள் கனவை நனவாக்கும் வகையில், ‘மேக்-அ-விஷ் ஆஸ்திரேலியா’ (Make-A-Wish Australia) தொண்டு நிறுவனம் மற்றும் ‘குவாண்டாஸ்’ (Qantas) விமான நிறுவனம் இணைந்து, அவரை ஒரு நாள் விமானப் பணிப்பெண்ணாக மாற்றி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

திரிஷாவின் குடும்பத்தினர் ஆண்டுதோறும் பயணம் மேற்கொள்ளும் வழக்கமுடையவர்கள். ஒவ்வொரு முறை விமானத்தில் பயணிக்கும்போதும், அங்கிருக்கும் பணிப்பெண்களின் சேவையாலும் அவர்களின் முக்கியமான பொறுப்புகளாலும் ஈர்க்கப்பட்ட திரிஷாவுக்கு, தானும் ஒரு நாள் விமானப் பணிப்பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

இதனை நிறைவேற்றும் வகையில், கடந்த செப்டம்பர் 15 அன்று சிட்னியிலிருந்து அடிலெய்டு சென்ற QF735 ரக குவாண்டாஸ் விமானத்தில், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சீருடை அணிந்து திரிஷா பணிப்பெண்ணாகச் செயல்பட்டார்.

முன்னதாக, குவாண்டாஸ் பயிற்சி மையத்தில் அவசரகால நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு முறைகளைத் திரிஷா கற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து விமானத்தில் பயணித்த மக்களுக்குச் சிற்றுண்டிகளை வழங்கி, உபசரிப்புப் பணிகளில் ஈடுபட்டார்.

“சிற்றுண்டி தள்ளுவண்டியை (trolley) தள்ளிச் சென்று மக்களுக்கு உணவு வழங்கியது எனக்கு மிகவும் பிடித்தமான பகுதி. அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது” என்று திரிஷா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

விமானப் பாதையில் அவர் நடந்து சென்று சேவை செய்தபோது பயணிகள் அனைவரும் அவரைப் புன்னகையுடன் வரவேற்றனர்.

இது குறித்துப் பேசிய திரிஷாவின் தந்தை ஜெரால்ட் (Gerald), “எனது மகள் இவ்வளவு மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருப்பதைப் பார்ப்பது மனதிற்கு நிறைவாக உள்ளது. விமானப் பணிப்பெண்ணாகப் பயணிகளிடம் பேசிச் சேவை செய்தது அவளுக்கு ஒரு சிறந்த அனுபவமாக அமைந்தது” என்றார்.

திரிஷாவின் தாயார் மிஷெல் (Michelle) கூறுகையில், “திரிஷா தனது வாழ்க்கையில் பல கடினமான கட்டங்களைக் கடந்து வந்துள்ளார். குவாண்டாஸ் சீருடையில் அவர் பணியாற்றுவதைப் பார்த்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம். அனைவரும் இணைந்து அவளது நாளை மறக்க முடியாததாக மாற்றிவிட்டனர்” என நெகிழ்ச்சியடைந்தார்.

இந்த அனுபவத்தின் போது திரிஷாவுக்கு வழிகாட்டியாக இருந்த குவாண்டாஸ் பணிப்பெண் ஆஷ்லி ஃபிஷர் (Ashlee Fischer), “பயிற்சி மையத்திற்கு வந்ததிலிருந்தே திரிஷா மிகவும் தன்னம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் செயல்பட்டார். என் வாழ்நாளில் நான் செய்த மிகச்சிறந்த பணிகளில் இதுவும் ஒன்று” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

குவாண்டாஸ் நிறுவனம் இது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில், பலரும் திரிஷாவுக்குத் தங்களது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles