லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது திரைப்படம்.. மீண்டும் இணைந்த சூப்பர்ஹிட் கூட்டணி

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கு கடந்த மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தற்போது படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார் நயன்தாரா. ஜவான் படத்தின் படப்பிடிப்பு முடித்த கையோடு, ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நயன்தாராவின் 75வது படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் Trident Arts – Naad Studios – Zee Studios என மூன்று நிறுவனம் ஒன்றிணைந்து தயாரிக்கிறார்கள். நிகிலேஷ் கிருஷ்ணா எனும் புதுமுக இயக்குனர் நயன்தாராவின் 75வது படத்தை இயக்கிறார்.

இவர், இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் ஆவர். மேலும், இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய் மற்றும் சத்யராஜ் நடிக்கவுள்ளார்கள். ஏற்கனவே சத்யராஜ், நயன்தாரா மற்றும் ஜெய் மூவரும் இணைந்து ராஜா ராணி படத்தில் நடித்திருந்தார்கள்.

ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ இப்படத்தை இயக்கினார். அதே போல், ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த நிகிலேஷ் கிருஷ்ணா, நயன்தாராவின் 75வது படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles