வட மாகாண ஆளுநராக பதவியேற்ற பி.எஸ்.எம் சாள்ஸை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரனியுமான எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற இச் சந்திப்பின் போது வடக்கின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண ஆளுநராக இருந்த ஜீவன் தியாகராசா ஐனாதிபதியால் நீக்கப்பட்டு புதிய ஆளுநராக சாள்ர்ஸ் நியமிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் முதற் தடவையாக இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
