வல்லரசு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு! உலக அரசியலில் திருப்பம் ஏற்படுமா?

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடனுடன் நான்கு மணிநேரம் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில்,  ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்றுவருகின்றது.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக 4 நாட்கள் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், உச்சி மாநாட்டுக்கு முன்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேச்சு நடத்தினார்.

அமெரிக்கா- சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இரு தலைவர்கள் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

அவர்களின் சந்திப்பின்போது ரஷ்யா –  உக்ரைன் போர், வடகொரியா, தைவான் விவகாரம், வர்த்தகம், பொருளாதாரம், இராணுவ உறவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளன.

குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையில் போட்டி இருந்தாலும் அது மோதலாக மாறாமல் இருப்பதற்கான பொறுப்பு இரு தரப்புகளுக்கும் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உலக நாடுகளுக்கு, அமெரிக்க – சீன உறவு மிக முக்கியம் என சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles