வவுனியாவில் நாளை மறுதினம் போராட்டம்! தமிழரசுக்கட்சி அழைப்பு!

” வவுனியாவில் நாளை மறுதினம் இடம்பெறும் மாபெரும் போராட்டத்திற்கு இன – மதம் – கட்சி பேதம் பாராது அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.” – என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.

” வடக்கு நாரை மலையில் ஆதி லிங்கம் உட்பட விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தேன். அவர் குறித்த விடயம் தொடர்பில் விவரமாக தனக்கு அனுப்பி வைக்குமாறு கோரி இருந்தார். அதன் அடிப்படையில் நேற்றிரவு அவசரமாக அவருக்கு கடிதம் மூலம்
உள்ள பிரச்சனைகளை தெளிவாக எழுதி இருக்கின்றேன்.

அதேபோல நாளை மறுதினம் வவுனியாவில் மாபெரும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த போராட்டத்தில் நாங்கள் அனைவரும் கலந்து கொண்டு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக வெடுக்குநாறி மலை விடயம் மாத்திரமல்லாது வடபகுதியில் உள்ள ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் நாம் எமது குரல்களை எழுப்ப வேண்டும்.” – எனவும் மாவை குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles