விஜய்யின் சொகுசு கார் வழக்கு! தீர்ப்பு பற்றி வந்த முக்கிய தகவல்

வரி செலுத்த தாமதம் ஆனதற்கு 400 சதவீத அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் தள்ளி வைத்து இருக்கிறது.

நடிகர் விஜய் பிஎம்டபுள்யூ சொகுசு காரை இறக்குமதி செய்ததற்கு நுழைவு வரி செலுத்த தாமதம் ஆனதற்கு 30.23 லட்சம் ரூபாய் அபராதமாக தமிழ்நாடு வணிகவரி துறை விதித்தது.

விஜய் 7.98 லட்சம் ருபாய் செலுத்திய நிலையில் அது செலுத்த தாமதம் ஆனதாக கூறி அபராதம் விதித்த நிலையில் விஜய் தரப்பு இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றது.

இந்த வழக்கு பற்றிய விசாரணை இன்று நடந்தது. அதில் விஜய் மட்டுமின்றி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கும் சேர்ந்து விசாரிக்கப்பட்டது.

அபராதம் விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது, விஜய் தொடர்ந்த வழக்கை அபாரதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு தரப்பில் கேட்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்திருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது.

Related Articles

Latest Articles